Loading...

செய்திகள்

Dec 06, 2025
News Image

ஆயிரம் தடைகள் வந்தாலும், அறிவால், விடாமுயற்சியால், போராட்ட மனப்பாங்கால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதை உலகுக்கு நிரூபித்த புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவரின் சிந்தனைகளை நினைவு கூர்வோம் இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் டாக்டர் இரவி பச்சமுத்து அறிக்கை

இன்று அண்ணல் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் நினைவுநாள். சமூக நீதியின் ஒளியையும், மனித சமத்துவத்தின் பாதையையும் இந்த நாட்டுக்கு காட்டிய மாமனிதர் அம்பேத்கர் அவர்கள். ஆயிரம் தடைகள் வந்தாலும், அறிவால், விடாமுயற்சியால், போராட்ட மனப்பாங்கால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதை உலகுக்கு நிரூபித்த புரட்சியாளர் அவர். இந்திய அரசியலமைப்பை தலைமை தாங்கி உருவாக்கியவர்.. ஒவ்வொரு மனிதனும் சம உரிமையுடனும் சுயமரியாதையுடனும் வாழ வேண்டும் என்ற உயர்ந்த கனவைக் கொண்டு உழைத்தவர். அவர் காட்டிய சமூக நீதிப் பாதையை நாம் அனைவரும் பின்பற்றவேண்டும்.. சாதி, மத, மொழி, பாலினம் என எந்த வேறுபாடுகளும் இல்லாமல் ஒவ்வொருவரும் சமமான உரிமைகளுடன் வாழும் சமத்துவச் சமுதாயத்தை உருவாக்குவது நமது முதன்மை கடமை என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். அவரின் சமூகப் புரட்சியும், அறிவுக் கொள்கைகளும் தலைமுறைகளுக்கு ஒளி விளக்காக நிற்க வேண்டும் எனக்கூறி, அவரின் நினைவு நாளில் அம்பேத்கர் அவர்களின் சிந்தனைகள் நினைவுகூர்வோம், பின்பற்றுவோம். அன்புடன், டாக்டர் ரவிபச்சமுத்து தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)

Back to News