Loading...

செய்திகள்

Dec 03, 2025
News Image

அக்னி வடிவமான அருணாச்சலேஸ்வரரின் அருளாலும் - ஆசியாலும் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி வெள்ளம் பெருகட்டும் IJK தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து அவர்களின் கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துச்செய்தி

கார்த்திகை மாத பௌர்ணமி நாளில் ஏற்றப்படும் தீபங்கள், நமது ஒற்றுமையையும் ஆன்மீக ஒளியையும் குறிக்கின்றன. இருளிலிருந்து வெளிச்சத்திற்குச் செல்லும் வாழ்வியல் செய்தியை இந்த நாளின் தீப ஒளி நமக்கு நினைவூட்டுகின்றது. இன்று ஏற்றப்படும் கார்த்திகை தீபங்கள் அனைவரின் வாழ்க்கையையும் ஒளிரச் செய்யட்டும். அனைவர் இல்லங்களையும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் செழிப்புடன் நிரப்பட்டும். அக்னி வடிவமான பரம்பொருள் அருணாச்சலேஸ்வரர் அருளாலும் – ஆசியாலும், இந்த கார்த்திகை தீபத்திருநாளில், அறியாமை எனும் இருள் அகன்று அனைவரின் வாழ்வும் ஒளிரட்டும் எனக்கூறி, அனைவருக்கும் இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். வாழ்த்துக்களுடன், டாக்டர் ரவிபச்சமுத்து தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)

Back to News