இன்று மாலை திண்டுக்கல் நோக்கி சென்ற அரசுப்பேருந்தும் – திருப்பூரிலிருந்து காரைக்குடி நோக்கி சென்ற பேருந்தும் பிள்ளையார்பட்டி அருகே நேருக்கு நேர் மோதியதில் 11 பேர் உயிரிழந்தும் 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமுமடைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமும் துயரமும் அடைந்தேன். திடீரென ஏற்பட்ட இக்கோர விபத்தில் பலியான அப்பாவி பயணிகளின் மறைவு அக்குடும்பத்தாருக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். விபத்தில் பலியானவர்களை அவர்களின் உறவினர்களிடம் சேர்க்க அரசு விரைந்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்வதோடு, இக்கோர விபத்தில் தனது குடும்ப உறவினர்களை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலையும் – வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்வதோடு, விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் விரைவில் பூரண குணமடைந்து அவரவர் இல்லம் திரும்ப இறைவனை வேண்டுகின்றேன். வருத்தங்களுடன், டாக்டர் ரவிபச்சமுத்து தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)
Powered by iPOT Technologies