Loading...

செய்திகள்

Sep 04, 2025
News Image

ஒரு மனிதன் தான் எடுத்த பிறவியில் எவ்வாறு வாழவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டியவர் முகம்மது நபிகள் - IJK தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து மீலாதுன் நபி வாழ்த்து

அகிலத்திற்கு ஒரு அருட்கொடையாக அளவற்ற அருளாளன் - நிகரற்ற அன்புடையோனாகிய, அல்லாஹூ தாலாவின் இறுதித் தூதுவராக வந்து உதித்தவர் முகமது நபி (ஸல்) அவர்கள். உலகில் அன்பு, நட்பு, ஒற்றுமை, சகோதரத்துவம், சகிப்புத் தன்மை, எதிரிகளை மன்னிக்கும் பெருந்தன்மை ஆகியவை வளர்வதற்கும், இம்மையாகிய தான் எடுத்த பிறவியில் ஒரு மனிதன் எவ்வாறு வாழவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாகவும் வாழ்ந்து காட்டியவர் முகம்மது நபிகள் அவர்கள். இஸ்லாமிய சகோதரர்கள் மகிழ்ந்து கொண்டாடும் இந்த இனிய மீலாதுன் நபி திருநாளை, எல்லா மதத்தினரும் போற்றுவோம். மானுடம் தழைக்க இறைத்தூதர் நபிகள் நாயகம் அருளிய போதனைகளை மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வில் கடைப்பிடித்து வாழ்ந்தால், வாழ்வில் ஏற்றம் பெறலாம். முகம்மது நபி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து அவரது திடமனது - மாறாத சொல்வளம் - பேச்சாற்றல் ஆகியவைகளை நாமும் பெறுவோம் என்று கூறி, உலகெங்கும் வாழும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது ‘மீலாதுன் நபி’ வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். வாழ்த்துக்களுடன், டாக்டர் ரவிபச்சமுத்து தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி

Back to News