Loading...

செய்திகள்

Sep 04, 2025
News Image

மதவேறுபாடுகளை முற்றிலும் வேறருக்க பாரம்பரியமிக்க பண்டிகைகளை ஒற்றுமையுடன் கொண்டாடுவோம்” IJK தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து அவர்களின் ஓணம் திருநாள் வாழ்த்துச்செய்தி

ஓணம் பண்டிகை இந்தியாவின் தென்தமிழகத்திலும் கேரள மாநிலத்திலும் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா ஆகும். சாதி, மத வேறுபாடின்றி அனைத்து மலையாளிகளாலும் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை, கேரளாவின் அறுவடை திருநாள் எனவும் அழைக்கின்றார்கள். பக்தி, வீரம், அன்பு, ஈகை, பெருந்தன்மை ஆகிய நல்ல குணங்களால் அறியப்படுபவர் மகாபலி மன்னன். தன்னுடைய முக்தி தருணத்தில், கிருஷ்ண பகவானிடம் வரம்பெற்றதன் மூலம் ஆண்டிற்கு ஒருமுறை மக்களைக் காண வருகை தரும் மகாபலி மன்னனை வரவேற்கும் நாளாக, மலையாள மொழி பேசும் மக்களால் ஓணம் திருநாள் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அன்றைய தினத்தில் மகாபலி மன்னன் தங்கள் இல்லம் தேடி வருவார் என்ற நம்பிக்கையுடனும் மலையாள மக்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது. மதவேறுபாடுகளை முற்றிலும் வேறருக்க இப்படிப்பட்ட பண்டிகைகளை ஒற்றுமை உணர்வுடன் கொண்டாடும்போது, மத நல்லிணக்கம் வலுப்படும். அன்பு, ஒற்றுமை, அமைதி, சகிப்புத் தன்மை, சகோதர நேயம், பகிர்ந்துண்ணும் பண்பு முதலிய குணங்கள் பேணி வளர்க்கப்பட வேண்டும் என்பதை, ஓணம் திருநாள் மனித சமுதாயத்திற்கு உணர்த்துகிறது. இத்தருணத்தில் உலகெங்கும் வாழும் மலையாள சகோதர – சகோதரிகளுக்கு என் சார்பிலும் – இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பிலும் இனிய திருவோணம் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். வாழ்த்துக்களுடன், டாக்டர் ரவிபச்சமுத்து தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)

Back to News