“கைத்தல நிறைகனி அப்பமொடு அவல்பொறி கப்பிய கரிமுகன்” என அருணகிரிநாதரால் பாடி போற்றப்பட்ட ஞானமுதல்வனாகிய விநாயகர் அவதரித்த திருநாளை விநாயகர் சதுர்த்தி என கொண்டாடி வருகின்றோம். கடவுள்களில் முதன்மையானவர் விநாயகர், விரதங்களில் முதன்மையானது விநாயகர் சதுர்த்தி விரதம் என்கிற நம்பிக்கை தொன்றுதொட்டு வழக்கத்தில் உள்ளது. இந்தியாவின் ஒருமைப்பாட்டையும், ஆன்மீக வளர்ச்சியையும், வார்த்தெடுக்கும் தளமாகவும், அனைத்து சாதி – மதங்களையும் ஒருங்கிணைக்கும் சங்கமமாகவும் விளங்குவதே இதுபோன்ற கடவுளின் அவதார திருவிழாக்கள்தான். தெளிந்த அறிவும் – நற்சிந்தணையும் கொண்ட மாணவர் சமுதாயம் உருவாக வேண்டும். எதனையும் எதிர்மறை கண்ணோட்டத்துடன் பார்க்கின்ற இயல்பு ஒழிந்து, நேர்மறை சிந்தனையுடன் அணுகும் போக்கு வரவேண்டும். இதனால் சமூக உறவுகளும் – குடும்ப உறவுகளும் நிலைத்து நிற்கும். அதனை நாம் பெற மேலான அறிவையும் – தளராத மனதையும் தரவேண்டுமென, முதன்மைக்கடவுளான விநாயகரை போற்றி வணங்குவோம் எனக்கூறி, அவரை வழிபடும் அனைத்து மக்களுக்கும் எனது சார்பிலும் இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பிலும் என் அன்பான, விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். வாழ்த்துக்களுடன், டாக்டர் ரவிபச்சமுத்து தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)
Powered by iPOT Technologies