Loading...

செய்திகள்

Jul 19, 2025
News Image

முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் மகனும் தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் சகோதரருமான திரு.மு.க.முத்து அவர்களின் மறைவுக்கு - IJK தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து இரங்கல் –

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் - திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் தலைவருமான முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் மூத்த மகனும், தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் சகோதரருமான திரு.மு.க. முத்து அவர்கள் உடல்நலக்குறைவால் இன்று மறைந்தார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். தமிழ்த் திரைப்பட நடிகரும் - மேடைப் பாடகருமான மு.க.முத்து அவர்கள் திரைத்துறையில் சில காலங்கள் இருந்தாலும் மக்கள் மனதை வெகுவாகக் கவர்ந்தவர். திரைத்துறையில் 1970 ஆம் ஆண்டு நுழைந்து, பிள்ளையோ பிள்ளை, அணையா விளக்கு உள்ளிட்ட பல படங்களில் நடித்தும் தனது சொந்தக் குரலில் பல்வேறு பாடல்களை பாடியும் புகழ்பெற்றவர். திரு.மு.க.முத்து அவர்களின் மறைவால், அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் - முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் – திரைத்துறை நண்பர்களுக்கும் என் சார்பிலும், இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, அன்னாரின் ஆன்மா இறைவனடி நிழலில் இளைப்பாற இறைவனை வேண்டுகின்றேன். வருத்தங்களுடன், டாக்டர் ரவிபச்சமுத்து தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)

Back to News