இன்று மதியம் 1.30 மணியளவில் பயணிகளுடன், அகமதாபாத் சர்தார் வல்லபாய்பட்டேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலண்டன் புறப்பட்ட ஏர்இந்தியா விமானம் புறப்பட்ட 5 நிமிடங்களிலேயே தொழில்நுட்பக்கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானதில், நிகழ்ந்த பயங்கர விமான விபத்தை பார்த்து ஆற்றுண்ணா துயரம் அடைந்தேன். விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரின் மன வலியையும், உணர்கின்ற துயரத்தையும் வார்த்தைகளால் சொல்ல இயலாது. மத்திய பேரிடர் மீட்புக்குழு விரைந்து பணியாற்றிவருகின்றது. தொய்வில்லாமல் அவர்களின் மீட்புப்பணிகள் நிறைவடைந்து, இக்கோர விபத்தில் உயிர்பிழைத்தவர்களும் – குடியிறுப்பு பகுதியில் பாதிக்கப்பட்டுள்ளவர்களும் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன். இந்த விமானத்தில், லண்டனில் உள்ள தனது மகளைப் பார்க்கச் சென்று இக்கோரவிபத்தில் சிக்கி உயிரிழந்த குஜராத் முன்னாள் முதலமைச்சர் திரு.விஜய் ரூபானி அவர்களுடைய குடும்பத்தாருக்கும் - பயணிகள் மற்றும் விமானப்பணியாளர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் எனது சார்பிலும், இந்திய ஜனநாயகக் கட்சி சார்பிலும் ஆழ்ந்த இரங்கலையும் – வருத்தத்தினையும் தெரிவித்துக் கொள்கின்றேன். வருத்தங்களுடன், டாக்டர் ரவிபச்சமுத்து தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)
Powered by iPOT Technologies