இந்திய ஜனநாயக் கட்சியின் உயர்மட்ட நிர்வாகக்குழு உறுப்பினரும் - மாநில போராட்டக் குழு செயலாளரும் - பார்க்கவகுல முன்னேற்ற சங்கத்தின் பொதுக்குழு உறுப்பினருமான திரு.சிமியோன் சேவியர் ராஜ் அவர்களின் தாயார் திருமதி. மரிய ஆரோக்கியம் அவர்கள் இன்று காலை உடல் நலக் குறைவு காரணமாக இயற்கை எய்தினார்கள் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமும் – துயரமும் அடைந்தோம். ஒரு தாயின் இழப்பு என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாத பேரிழப்பாகும். அன்புத்தாயை இழந்து வாடும் திரு.சிமியோன் சேவியர் ராஜ் அவர்களுக்கும் – குடும்பத்தாருக்கும் – உறவினர்களுக்கும் எனது சார்பிலும் - இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பிலும் ஆழந்த இரங்கலையும், வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னையின் ஆன்மா இறைவனடி நிழலில் இளைப்பாற இறைவனை வேண்டுகின்றேன். வருத்தங்களுடன், டாக்டர் ரவிபச்சமுத்து தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)
Powered by iPOT Technologies