Loading...

செய்திகள்

Jun 10, 2025
News Image

சமூக ஒற்றுமையும் - மத நல்லிணக்கமும் மேன்மையடைய தமிழக அரசு எப்போதும் பாலமாக இருக்கவேண்டும் சமுதாய பிரச்சனைக்காக நிறுத்திவைக்கப்பட்டுள்ள வேப்பந்தட்டை தேர்த்திருவிழா சிறப்பாக நடக்க வழிவகை செய்யவேண்டும் IJK தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து கோரிக்கை

வேப்பந்தட்டையில் நடைபெற இருந்த தேர்திருவிழா, ஊர் மக்களின் இரு சமுதாயத்திற்கு இடையேயான பிரச்சனைகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து வருத்தமடைந்தேன். கடைபிடிக்கப்பட்டுள்ள நடைமுறையின் படி, இந்த பிரச்சனையில் அரசு தலையிட்டு நடுநிலையோடு செயல்பட்டு, தேர்த்திருவிழா சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகின்றோம். மக்களிடையே பிரிவினை சக்திகளை வேரறுத்து - ஒற்றுமையை நிலைநாட்டி - மக்களின் இறை செயல்பாடுகளை, பக்தி எண்ணங்களை நிறைவேற்றவும், சமூக ஒற்றுமையும் - மத நல்லிணக்கமும் மேன்மையடைய, நிறுத்திவைக்கப்பட்டுள்ள இத்தேர்திருவிழா சிறப்பாக நடைபெற வழிவகைசெய்ய வேண்டும் என இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.. அன்புடன், டாக்டர் ரவிபச்சமுத்து தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)

Back to News