இல்லாதவர்க்குக் கொடுப்பதால், கொடுப்பவரும் - பெறுபவரும் முகத்தாலும், மனத்தாலும் மகிழ்ச்சி அடைவர். அந்த வகையில், ஈட்டிய பொருளில் ஒரு பகுதியை ஏழை எளியோர் இன்னல் தீர வழங்கி மகிழ்வதையும், அந்த இன்பத்தை எய்திட இசுலாமியப் பெருமக்களுக்கு வழிகாட்டுவதே இந்த பக்ரீத் பெருநாள். இந்த புனித நாளில், சமாதானம், சகோதரத்துவம் மற்றும் ஈகை உணர்வுகளை வலியுறுத்தி, மக்கள் அனைவருக்கும் எனது சார்பிலும், இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பிலும் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன். வாழ்த்துக்களுடன், டாக்டர் ரவிபச்சமுத்து தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)
Powered by iPOT Technologies