மாநில மொழிகளின் உரிமைக்காகவும், மாநிலங்களின் உரிமைக்காகவும் போராடியவர் காயிதே மில்லத் அவர்கள். மத நல்லிணக்கத்துக்காகத் தன் வாழ்நாள் முழுதும் பாடுபட்டவர். முஸ்லிம் சமுதாயத்துக்கு இவரைப் போன்ற தலைவர் கிடைப்பது கஷ்டம் என்று தந்தை பெரியார் அவர்களால் புகழப்பட்ட, அனைவருக்கும் வழிகாட்டியாக விளங்கியத் தலைவர் கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் அவர்கள். அடிப்படை நேர்மை என்ற பண்புதான் அவரது அனைத்து நற்பண்புகளுக்கும் அடித்தளம். இவரது பிறந்தநாளில் அவரது பங்களிப்புகளையும், சேவைகளையும் நினைவு கூர்வோம் வாழ்த்துக்களுடன், டாக்டர் ரவிபச்சமுத்து தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)
Powered by iPOT Technologies