Loading...

செய்திகள்

Apr 13, 2025
News Image

அண்ணல் அம்பேத்கரின் புரட்சிகர கருத்துகளை நினைவு கூர்ந்து, அவரின் வழியில் நடந்து சமத்துவ சமுதாயத்தை உருவாக்கி, சமூக நலனுக்காக பாடுபடுவோம் என்று அம்பேத்கர் பிறந்தநாளில் உறுதியேற்போம் - IJK தலைவர் அம்பேத்கர் ஜெயந்தி வாழ்த்து -

ஏப்ரல்-14, அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள், தீண்டாமைக்கு எதிரான போர்க்குணம் - அயல்நாடு சென்று கடுமையாக உழைத்துப் பெற்ற பட்டங்கள் - வியக்கவைக்கும் மேதைமை - உலக வட்டமேசை மாநாடுகளில் சிறப்புமிக்கப் பங்களிப்பு - நாடாளுமன்ற அரசியல் செயல்பாடுகள் - உலகின் நெடிய அரசமைப்பைத் தலைமையேற்று உருவாக்குவதில் சீரிய பணி - பெளத்த மறுமலர்ச்சிக்கு நல்கிய வரலாற்றுப் பங்களிப்பு என அவரது செயல்பாடுகளை நம் நாட்டு மக்கள் குறிப்பாக இன்றைய இளைஞர்கள் அவரது பிறந்தநாளில் நினைவுகூர்ந்து, மேலும் வெற்றியோ தோல்வியோ எது வரினும் கடமையை செய்வோம். யார் பாராட்டினாலும், பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும் நேர்மையும் வெளியாகும்போது பகைவரும் நம்மை மதிக்கத் தொடங்குவார்கள் என்ற அம்பேத்கரின் புரட்சி வரிகளையும் நினைவு கூர்ந்து, அவரின் வழியில் நடந்து, நமது ஆளுமையில் தன்னம்பிக்கை மேலோங்கி, அடக்குமுறைக்கு எதிராகப் போராடும் சக்தியை நமக்குத் தரட்டும் என்றும், சமத்துவ சமுதாயத்தை உருவாக்கி, சமூக நலனுக்காக பாடுபடுவோம் என்றும் அம்பேத்கர் பிறந்தநாளில் உறுதியேற்போம் என, இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்கின்றேன். வாழ்த்துக்களுடன், (டாக்டர் ரவி பச்சமுத்து) தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)

Back to News