இன்று வெளியான +2 தேர்வில் வெற்றிபெற்ற மாணவ – மாணவிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் – பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன். உங்களின் அயராத உழைப்பும் – ஈடுபாடும் - உற்சாகமும் இன்று வெற்றியாக மலர்ந்துள்ளது. தேர்வு முடிவுகள் எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு நமக்கான வாழ்க்கை பயணத்தை நல்வழியாக மேற்கொள்ள வேண்டும் என்பதை மாணவச்செல்வங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கான எதிர்கால புதிய பாதை - புதிய பயணங்கள் நிச்சயம் உருவாகும். நம்பிக்கையுடன் அனைத்தையும் கடந்து செல்ல வேண்டும் என மாணவச் செல்வங்களையும், பெற்றோர்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். உங்களின் எதிர்கால கல்வி மற்றும் வாழ்க்கை பயணத்திலும் சிறந்து விளங்க, எனது சார்பிலும், இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பிலும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். வாழ்த்துக்களுடன், (டாக்டர் ரவி பச்சமுத்து) தலைவர் இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)
Powered by iPOT Technologies