• இந்திய நாட்டின் வளர்ச்சிக்காக பாரதப்பிரதரமரின்தொலைநோக்கு பார்வைக்கு மக்கள் அளித்தமகத்தான பரிசுமூன்று மாநில தேர்தல் வெற்றிபிஜேபி-யின்மூன்று மாநில தேர்தல் வெற்றிக்குஐஜேகே தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து அவர்கள் வாழ்த்து

  மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநிலங்களுக்கு அண்மையில் தேர்தல் நடைபெற்று முடிந்தது. அதில் மிசோரம் தவிர்த்து மீதமுள்ள நான்கு மாநில தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வந்தன. ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரஸை வீழ்த்தி பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் பெரும்பான்மை இடங்களில் வென்று இரண்டாவது முறையாக தொடர்ந்து ஆட்சி அமைக்கவுள்ளது.

   

  4 மாநிலத் தேர்தலில் 3 மாநிலங்களில் பாஜக வெற்றிபெற்றுள்ளது பாராட்டுக்குரியது.  இந்திய நாட்டின் வளர்ச்சிக்காக பாரதப்பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் தொலைநோக்கு பார்வைக்கும் – அவரின் தலைமை மீதும் மக்கள் வைத்த நம்பிக்கையின் வெளிப்பாடே இந்த மூன்று மாநில தேர்தல் வெற்றி.

   

  பா.ஜ.க-வின் மூன்று மாநில தேர்தல் வெற்றிக்கும் - மேலும் உங்கள் வெற்றிப்பயணம் தொடரவும் – பாரதப்பிரதமர் திரு.மோடி ஜி அவர்களுக்கும், வெற்றிபெற்ற  வேட்பாளர்களுக்கும் இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் இதயபூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

       வாழ்த்துக்களுடன்,

  டாக்டர் ரவிபச்சமுத்து

  தலைவர்

  இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)