• மனிதவள மேம்பாட்டிற்கு இன்றியமையாததாக விளங்கும் கல்வியும் – செல்வமும் அனைவர் வாழ்விலும் செழித்தோங்கட்டும் டாக்டர் பாரிவேந்தர் MP அவர்கள் விடுத்திருக்கும் ஆயுதபூஜை – விஜயதசமி வாழ்த்துச்செய்தி

  ஒவ்வொரு மனிதருக்கும் இன்றியமையாததாக விளங்கும் கல்வி – செல்வம் – வீரம் ஆகியவற்றிற்கு அதிதேவதைகளாக விளங்கும் கலைமகள் – திருமகள் – மலைமகள் எனும் முப்பெரும் தேவியர்களை,  தூய்மையான உள்ளத்துடனும் – பக்தியுடனும் போற்றி வழிபடும் விழா விஜயதசமியாகவும் – நவராத்திரியாகவும்  நாடு முழுவதும்  கொண்டாடப்படுகிறது.

   

   உள்ளத்தின் அழுக்குகளை முற்றிலுமாக நீக்கிசாமானியர்கள் முதல் சகலமும் படைத்தவர்கள் வரை,  அனைவரின் வாழ்விலும் நன்நெறிமுறைகளை வகுத்து,  ஒளிதீபம் ஏற்றுவது  கல்விதான்”  என்பதனை உணர்த்தும் விதமாக,  சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகின்றது.  ஒரு மனிதனுக்கு கல்வி எவ்வளவு முக்கியமோஅதேபோல அவர் செய்யும் தொழிலும் முக்கியத்துவம் பெற்றதுசெய்யும் தொழிலே தெய்வம் என்பது பழமொழிஎனவே நாம் செய்யும் தொழிலையும் அதற்கான கருவிகளையும் இறைவன் முன்பாக வைத்து வழிபடும் முறையும் இந்த நாளில் பின்பற்றப்படுகிறது.

   

  இந்த நல்ல நாளில் இந்திய தேசத்திலும் – தமிழகத்திலும் தொழில் வளமும்கல்வி மற்றும் செல்வமும் பெருகி மக்கள் எல்லா வளமும்  நலமும்பெற,  என்னுடைய  இதயம் கனிந்த  ஆயுதபூஜை  மற்றும்  விஜயதசமி  நல்வாழ்த்துக்களை  தெரிவித்துக்கொள்கின்றேன்.

  வாழ்த்துக்களுடன்,

  டாக்டர் பாரிவேந்தர் M.P

  நிறுவனர் - இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)

  பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர்