• கடவுளின் அவதார திருநாட்கள் நம் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டின் அடையாளங்களாகும் டாக்டர் பாரிவேந்தர் M.P அவர்கள் விடுத்திருக்கும் - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துச் செய்தி –

   

  ‘ஐந்து கரத்தான்’ என்று அழைக்கப்படும் விநாயகப்பெருமான் அவதரித்த திருநாளான ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி தினத்தை  விநாயகர் சதுர்த்தி விழாவாகக் கொண்டாடி மகிழ்கின்றோம்.

   

  இந்தியாவின் ஒருமைப்பாட்டையும், ஆன்மீக வளர்ச்சியையும்,  வார்த்தெடுக்கும் தளமாகவும், அனைத்து சாதி – மதங்களையும் ஒருங்கிணைக்கும் சங்கமமாகவும் விளங்குவதே இதுபோன்ற கடவுளின் அவதார திருவிழாக்கள்தான்.  அந்த வகையில் விநாயகர் சதுர்த்தி திருவிழா என்பது நம் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமாகவும், நம் நாட்டின் முதன்மையான பண்டிகையாகவும் விளங்கி வருகின்றது.

   

   

  இந்த நன்னாளில் வினைதீர்க்கும் தெய்வமும், கடவுளுக்கெல்லாம் முழுமுதற் கடவுளுமான விநாயகரின் பரிபூரண அருள் அனைவருக்கும் கிடைத்து, எல்லோருடைய வாழ்க்கையிலும்  நலமும் - வளமும் பெற்று வாழ எனது உளம்கனிந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.