• பாரதம் வென்றது – தமிழனின் துணையுடன்” விண்வெளிதுறை வரலாற்றில் இந்தியாவின் புதிய சாதனை சந்திராயன் – 3 நமக்களித்த வெற்றியாகும் டாக்டர் பாரிவேந்தர் M.P அவர்கள் விடுத்திருக்கும் வாழ்த்துச் செய்தி

    சந்திராயன் 3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவி, விண்கலம் புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டு, வெற்றிபெற்றதன் மூலம் விண்வெளித் துறை வரலாற்றில் இந்தியா  மிகப்பெரிய சாதனையை படைத்து, இந்தியாவின் தொழில்நுட்ப வலிமை புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது. சந்திரயான் -3 விண்கலத்தின் பயணம் வெற்றி அடைந்தது மேலும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு வித்திட அச்சாரமாக அமைந்துள்ளது. 

     அதிலும், நாமெல்லாம் பெருமைகொள்ளும் வகையில் முதன்முறையாக நிலாவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை நம் நாடு பெற்றிருக்கின்றது. மேலும் சந்திராயன் – 3 விண்கலத்திட்டத்தில், திட்ட இயக்குநராக செயல்பட்ட, தமிழக விஞ்ஞானி திரு.பி.வீரமுத்துவேல் அவர்களின் பங்களிப்பு பெருமளவில் இருந்தது.  தமிழனின் துணையுடன் பாரதம் வென்றது தமிழகத்திற்கு பெருமையைச் சேர்க்கின்றது. இத்திட்டத்திற்காக அயராது உழைத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.