-
பாரம்பரிய பண்டிகைகளை கொண்டாடுவதன் மூலம் நாட்டில் ஒற்றுமையும் – மதநல்லிணக்கத்தையும் வலுப்படுத்துவோம் டாக்டர் பாரிவேந்தர் M.P அவர்கள் விடுத்திருக்கும் ‘ஓணம்’ திருநாள் வாழ்த்துச்செய்தி
மக்களுக்காகவே நல்லாட்சி நடத்திய மகாபலி மன்னனை கேரள மாநில மக்கள் நன்றியுணர்ச்சியோடு அம்மன்னனின் நினைவை போற்றும் வகையிலும், அன்று அனைவரின் இல்லங்களுக்கும் மகாபலி மன்னன் வருவார் என்றும், அவர் புகழ்பாடி வரவேற்கும் நாளாக ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் எவ்வித பேதமுமின்றி மலையாள மொழி பேசுகின்ற கேரள மாநில மக்கள் தமிழக மக்களோடு, சகோதர உணர்வுடன் நீண்ட நெடுங்காலமாக வாழ்ந்தும் - தொழில் புரிந்து வருவதும் மிகுந்த மகிழ்ச்சிக்குரியதாகும். இதுபோன்ற பாரம்பரிய பண்டிகைகளை கொண்டாடுவதன் மூலம், மாநிலங்களுக்கிடையே ஒற்றுமையும் - மதநல்லிணக்கமும் வலுவாக வழிவகுக்கும் எனக்கூறி, உலகெங்கும் வாழும் மலையாள சகோதர – சகோதரிகளுக்கு எனது இனிய ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.