• இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் மாபெரும் வெற்றி.

   

   இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் சென்னை நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் அருகில்,  31/05.2023 காலை 11.00 மணிக்கு, கட்சியின் நிறுவனரும் - பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான அய்யா டாக்டர் பாரிவேந்தர் மற்றும் தலைவர் இளையவேந்தர் டாக்டர் ரவிபச்சமுத்து அவர்களின் தலைமையிலும், கட்சியின் பொதுச்செயலாளர் திரு.பி.ஜெயசீலன் அவர்களின் முன்னிலையிலும்  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நடந்தது.

  இந்த ஆர்ப்பாட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக காமராசர் மக்கள் கட்சியின்  தலைவர் தமிழறிஞர் தமிழருவி மணியன் அவர்கள் கலந்துகொண்டு,

  Ø  பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும்;

  Ø  மது விலை உயர்வினால் பெருகி வரும் கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்கவேண்டும்;

  என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொருளாளர் திரு.ஜி.ராஜன்-முதன்மை அமைப்புச் செயலாளர் திரு.எஸ்.எஸ்.வெங்கடேசன்-தலைமை நிலையச்செயலாரும், மாநில இளைஞரணி செயலாளருமான திரு.A.K.T,வரதராஜன்-காமராசர் மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் திரு.குமரய்யா – IJK போராட்டக்குழு செயலாளர் திரு.சிமியோன் சேவியர்ராஜ்-மகளிரணி செயலாளர் திருமதி அமுதா ராஜேஸ்வரன்- இளையவேந்தர் பேரவை தலைவர் திரு.ஆனந்தமுருகன்- விளம்பர பிரிவு செயலாளர் திரு.முத்தமிழ்செல்வன், மக்கள் தொடர்பு அலுவலர் திருமதி A.B.லதா, செய்தி தொடர்பாளர் திரு.பிரவின்காந்த் உள்ளிட்ட, தமிழகம் முழுவதிலும் இருந்து 1500-க்கும் மேற்பட்ட மாநில –மண்டல-மாவட்ட நிர்வாகிகள் பலருடன் கண்டன ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக  நடந்து முடிந்தது.

   

   இங்ஙனம்,

   கட்சித் தலைமையகம்

  இந்திய ஜனநாயகக் கட்சி  (IJK)