• புழக்கத்திலுள்ள 2000 ரூபாய் நோட்டுக்கள் திரும்பப்பெறப்படும் என்ற ரிசர்வ் வங்கியின் அறிவிப்பிற்கு டாக்டர் பாரிவேந்தர் M.P வரவேற்பு


    2016 நவம்பர் மாதம் அதுவரை புழக்கத்தில் இருந்த 1000 மற்றும் 500 நோட்டுக்கள் செல்லாது எனவும், புதியதாக ரூ.2000 – ரூ.500 மற்றும் ரூ.200 நோட்டுக்கள் ரிசர்வ் வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்டு புழக்கத்திற்கு வந்தது. இதனால் கணக்கில் வராத ஏராளமான பணம் ரிசர்வ் வங்கிக்கணக்கில் சேர்க்கப்பட்டது.

    2018–ஆம் ஆண்டு 6.73 லட்சம் கோடியாக இருந்த இந்த 2000 ரூபாய் நோட்டுக்கள் மார்ச் 2023-ல் 3.62 லட்சம் கோடியாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பொதுவான பரிவர்த்தனைகளுக்கு இந்த நோட்டுக்கள் பயன்படுத்தப்படுவதில்லை எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 2000 ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் விட்டதற்கான நோக்கம் நிறைவடைந்துவிட்டதாக கூறப்படுகின்றது.  எனவே புழக்கத்தில் இல்லாத - கணக்கில் வராத 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்பப்பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதை முழுமனதாக வரவேற்கின்றேன். 

     

    அன்புடன்,

    டாக்டர் பாரிவேந்தர் M.P

    நிறுவனர் - இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)

    பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர்