• 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவியருக்கு பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பாரிவேந்தர் M.P பாராட்டு


  10- ஆம் வகுப்பு  மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள  9.40 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் 91.39% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

  தமிழகத்தில் பெரம்பலூர் மாவட்டம் 97.67% தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்துள்ளது என்பது மேலும் மகிழ்ச்சியான செய்தி. பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள், அவரவர்களின்  விருப்பப்படி,  மேற்படிப்புகளில் கவனம் செலுத்தி உங்களின்  எதிர்காலத்தை  ஆரோக்கியமான முறையில் வடிவமைத்துக்கொள்ளும் முக்கிய பொறுப்பு மட்டுமின்றி, தமிழகத்தின் எதிர்காலமும் இளையதலைமுறையான  உங்கள் கைகளில் தான் உள்ளது எனக்கூறி,  வெற்றிபெற்ற மாணவச் செல்வங்களுக்கு  என்னுடைய  வாழ்த்துக்களை கூறிக்கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

   

   

   

   

  வாழ்த்துக்களுடன்,

  டாக்டர் பாரிவேந்தர் M.P

  பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி