• பெருகிவரும் கள்ளச்சாராயத்தை முழுவதுமாக ஒடுக்கவேண்டும் தமிழக அரசுக்கு டாக்டர் பாரிவேந்தர் M.P வலியுறுத்தல்

  ஏற்கனவே மதுவினால் சீரழிந்து வரும் தமிழக மக்களை காத்திட இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பாக நாங்கள் போராடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், தமிழக அரசு மதுபானங்களின் விலையை ஏற்றியதன் காரணமாக, கள்ளச்சாராய விற்பனை விஸ்வரூபம் எடுத்து,  மதுக்கடைகளோடு  சேர்ந்து கள்ளச்சாராயமும்  ஆறாக பெருக்கெடுத்து  ஓடியதன் விளைவால்,   நேற்று  விழுப்புரம்  மாவட்டம்  மரக்காணம்  அருகே  20  பேர்களின்  உயிரை  பலி  வாங்கியதோடு,  மருத்துவமனையில்  பலரின்  உயிர்  ஊசலாடிக்கொண்டிருப்பதை  அறிந்து  மிகுந்த  மனவேதனை அடைகின்றேன்.

   

  மதுக்கடைகளை மூடும் நடவடிக்கையோடு கள்ளச்சாராயத்தையும் அடியோடு ஒழிக்க தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதோடு,  இந்த நிலை மேலும் நீடித்தால், மதுவை ஒழிக்க இந்திய ஜனநாயக கட்சி மேலும் தனது போராட்டங்களை தீவிரப்படுத்தும். அதுமட்டுமல்லாமல், மதுவை ஒழிக்க போராட்டத்தின் எந்த எல்லைக்கும் இந்திய ஜனநாயகக் கட்சி செல்லும் என்பதையும்  தெரிவித்துக்கொள்கிறேன்.

   

   

   

  அன்புடன்,

  டாக்டர் பாரிவேந்தர் M.P

  பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி

  நிறுவனர் - இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)