தேசியமும் தெய்வீகமும் தனது இரு கண்களாகக் கொண்டு வாழ்ந்த தென்னாட்டுச் சிங்கம்! தேச விடுதலைக்காகப் பெரும் படையைத் திரட்டிய வீரத் தலைவர், வீரம், விவேகம், உண்மை, உறுதி ஆகியவற்றைத் தன் கொள்கையாகக் கொண்டு பொதுவாழ்வில் மிளிர்ந்த அரசியல் பேராளுமை. ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்திற்காக தனது வாழ்நாளையே அர்ப்பணித்த தெய்வத் திருமகனார் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் ஜெயந்தி மற்றும் குருபூஜை நாளான நேற்று, அவர்தம் பெரும் புகழைப் போற்றி வணங்குகிறேன். 🙏 பசும்பொன் புண்ணிய பூமியில் அமைந்துள்ள தெய்வத் திருமகனார் திருக்கோயிலில்,அவர்தம் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து.இந்திய ஜனநாயக கட்சி சார்பில் டாக்டர் ரவி பச்சமுத்து அவர்கள் மரியதை செலுத்தினார்.