நமது உத்தமத்தலைவர் டாக்டர் பாரிவேந்தர் ஐயா அவர்களின் ஆணையின்படியும், நமது தலைவர், இளையவேந்தர் ஐயா அவர்களின் வழிகாட்டுதலின்படியும் இன்று(24.09.25) கன்னியாகுமாரி,மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட சட்டமன்ற தொகுதி வாரியாக பொறுப்பாளர்கள் கூட்டம் மிகச்சிறப்பாக நடைப்பெற்றது. இந்நிகழ்வில் 190 பொறுப்பாளர்கள்(தென்மாவட்டங்களில் நம் கட்சி செயல்பாட்டை நிருபிக்கும் விதமாக)கலந்து கொண்டு சிறப்பித்தனர் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கின்றோம். மேலும் இதில் உள்ள 30 தொகுதி மாவட்ட தலைவர்கள் தாங்கள் அழைத்து வந்த நிர்வாகிகளையும், இதுவரை நியமித்துள்ள பொறுப்பாளர்களைப் பற்றியும், மீதமுள்ள பொறுப்பாளர்களை எவ்வளவு காலத்திற்குள் நியமனம் செய்வோம் என்பது பற்றியும் ஐயா அவர்களிடம் எடுத்துரைத்தனர். மாவட்ட தலைவர்களுக்கு மட்டுமே பொறுப்பாளர்களை நியமிப்பதில் முழு அதிகாரம் என்றும் அவர்களின் சீரிய சிறப்பான செயல்பாடுகளில் எந்த இடையூறும் இருக்காது யாருடைய குறுக்கீடும் இருக்காது என்பதையும் தெளிவுப்படுத்தி எடுத்துரைத்தார். மேலும் இந்திய ஜனநாயகக் கட்சியின் வலைதளம் குறித்தும், நீங்கள் ஒவ்வொருவரும் புதிதாக உறுப்பினர்களை நேரடியாக வலைதளத்தில் பதிவு செய்து உறுப்பினர் அட்டை பெறும் முறை குறித்தும், இன்னும் ஒரு மாத கால்ததில் அனைத்து சட்டமன்ற தொகுதியிலும் குறைந்தது 500 முதல் 1000 உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று எடுத்துரைக்கப்பட்டது. தெருமுனைக்கூட்டம் நடத்த விரும்பும் மாவட்ட தலைவர்கள், மருத்துவமுகாம் நடத்த விரும்பும் மாவட்ட தலைவர்கள் முறையாக தலைமைக்கு தகவல் தெரிவித்தால் அதற்கான உதவிகளையும், செலவுகளையும் தலைமை மேற்கொள்ளும் என மாண்பமை வேந்தர் ஐயா அவர்கள் மாவட்ட பொறுப்பாளர்களிடம் எடுத்துரைத்தார். மாவட்ட தலைவர்கள் முறையாக தங்களது தொகுதியில் உள்ள மகளிர் பொறுப்புகளையும், எத்தனை மகளிர் பொறுப்புகளில் உள்ளனர் என்ற எண்ணிக்கையையும் சரியாக அனுப்பி வைத்தால் மகளிருக்கான நம் கட்சி சேலை வழங்கப்படும் என்பதையும் ஐயா அவர்கள் அறிவித்தார்