முயற்சி செய்தால் எந்தப் போரிலும் வெற்றி சாத்தியம். இப்படை தோற்பின் எப்படை வெல்லும்!!! நமது உத்தமத்தலைவர் டாக்டர் பாரிவேந்தர் ஐயா அவர்களின் ஆணையின்படியும், நமது தலைவர், இளையவேந்தர் ஐயா அவர்களின் வழிகாட்டுதலின்படியும் இன்று(13.09.25) திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்ட சட்டமன்ற தொகுதி மற்றும் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி வாரியாக பொறுப்பாளர்கள் கூட்டம் மிகச்சிறப்பாக நடைப்பெற்றது. இந்நிகழ்வில் 353 பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கின்றோம். மேலும் இதில் உள்ள 13 தொகுதி மாவட்ட தலைவர்கள் தாங்கள் அழைத்து வந்த நிர்வாகிகளையும், இதுவரை நியமித்துள்ள பொறுப்பாளர்களைப் பற்றியும், மீதமுள்ள பொறுப்பாளர்களை எவ்வளவு காலத்திற்குள் நியமனம் செய்வோம் என்பது பற்றியும் ஐயா அவர்களிடம் எடுத்துரைத்தனர். உண்மையான வெற்றி பொறுமையிலும் நம்பிக்கையிலும் உள்ளது.