இன்று மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் டங்ஸ்டன் சுரங்க பணிகளை எதிர்த்து நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டார் தலைவர் ரவி பச்சமுத்து அவர்கள் .. முல்லைப் பெரியார் ஒரு போக பாசனம் விவசாய சங்கத்தின் பொறுப்பாளர்கள், பொதுமக்கள் மற்றும் இந்திய ஜனநாயக கட்சியின் பொறுப்பாளர்களுடன் இணைந்து, இந்த சுரங்க திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்ற முழக்கங்களை எழுப்பினோம். மேலும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், முல்லைப் பெரியார் பாசனப் பகுதிகளை பாதுகாப்பான வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினோம். மேலூர் விவசாயிகளின் உரிமைக்காக நடக்கும் இந்த போராட்டத்திற்கு இந்திய ஜனநாயக கட்சி எப்போதும் உறுதியான ஆதரவாக இருக்கும்.