இன்று திருச்சியில் உள்ள சர் A.T. பன்னீர்செல்வம் அய்யா மணி மண்டபத்தில், அவரின் திருவுருவ சிலைக்கு இந்திய ஜனநாயக கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் அன்பு தம்பிகளுடன் அமைதி பேரணியாக சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் தலைவர் ரவி பச்சமுத்து அவர்கள் .. தமிழர் சமூக முன்னேற்றத்திற்காக தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்த அய்யாவின் தொண்டை நினைவுகூர்ந்து, அவரது பாதையில் சமூக நீதிக்காக தொடர்ந்தும் பணியாற்ற உறுதி மேற்கொள்கிறோம்.