-
தமிழக அரசின் கவன குறைவால் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவி விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கடற்கரையோர மீனவ கிராமமான எக்கியார்குப்பத்தில் 13/5/23 தேதி 50-க்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு. விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில், தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று 17.05.2023பொதுச்செயலாளர் தளபதியார் ஜெயசீலன் அவர்களும் மாநில முதன்மை அமைப்பு செயலாளர் SS வெங்கடேசன் அவர்களும் தலைமை நிலைய செயலாளர் AKT வரதராஜன் அவர்களும் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.மேலும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து செங்கல்பட்டு மருத்துவமனை முதல்வரிடம் கேட்டறிந்தனர் உத்தமதலைவர் டாக்டர் பாரிவேந்தர் அய்யா அவர்களின் உத்தரவின் பெயரில் டாக்டர் ரவி பச்சமுத்து அவர்களின் ஆணையின்படி விஷ சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தில் இருப்பவர்களுக்கு SRM பல்கலைக்கழகத்தில் இலவசமாககல்லூரி படிப்பை படிப்பதற்கு வாக்குறுதி அளித்தது மட்டுமல்லாமல் அவரவர் படிப்பின் தகுதிக்கு ஏற்ப வேலை வாய்ப்பு கொடுப்பதாகவும் கூறினார். மேலும் ஐஜேகே விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் ஆலங்குப்பம் பாலா, விழுப்புரம் கிழக்கு மாவட்ட தலைவர் ஸ்ரீதர், விழுப்புரம் மத்திய மாவட்ட தலைவர் டாக்டர்.செந்தில் மற்றும் கட்சின் மாவட்ட மாநில நிர்வாகிள் பலரும் உடன் இருந்தனர்.