-
ஆசிரியர்கள் போராட்டத்திற்க்கு IJK ஆதரவு. பள்ளி கல்வித்துறை இயக்குனர் அலுவலக வளாகத்தில் அறவழி உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு இருக்கின்ற ஆசிரியர்களுடைய நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவாக நாம் உயிரினும் மேலான உத்தமதலைவர் டாக்டர் பாரிவேந்தர் அவர்களின் ஆணையின் படி நாம் தலைவர் இளையவேந்தர் டாக்டர் ரவி பச்சமுத்து அவர்களுடைய ஆலோசனையின் படி IJK -இந்திய ஜனநாயக கட்சி-யின் பொதுச்செயலாளர் பேராசிரியர் தளபதியார் ஜெயசீலன் அவர்கள் கலந்துகொண்டு ஆசிரியர் பெருமக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தறுமாறு தமிழக அரசை வலியுறுத்தி போராடும் ஆசிரியர்களுக்கா ஆதரவு நிலைப்பாட்டை அறிவித்தார். மேலும் கடந்த நான்கு தினங்களாக நடந்து வரும் இந்த உண்ணாவிரத அறப்போராட்டத்தில் மயக்க நிலை அடைந்த 60 ஆசிரிய பெருமக்களுக்கு ஆறுதல் கூறினார். மாணவர்களின் எதிர்காலம் ஆசிரியர்கள் கையில் தான் இருக்கிறது.ஆசிரியர்களின் நிகழ்காலம் அரசின் கையில் தான் இருக்கிறது. உரிய நடவடிக்கை எடுங்கள். நாள் :12.05.2023