-
இந்திய பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் தாயார் ஹீராபென் மோடி அவர்கள் இன்று அதிகாலை இயற்கை எய்தினார். இன்று மாலை தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்ட பிரதமர் மோடியின் தாயர் திருவுறுவப்படத்திற்கு பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் மாண்பமை டாக்டர் பாரிவேந்தர் அவர்கள், IJK -இந்திய ஜனநாயக கட்சி தலைவர் டாக்டர். ரவி பச்சமுத்து அவர்கள், பொதுச் செயலாளர் பேராசிரியர் திரு பி ஜெயசீலன் அவர்கள், முதன்மை அமைப்புச் செயலாளர் திரு.எஸ்.எஸ்.வெங்கடேசன் அவர்கள், மாநில விளம்பரபிரிவு செயலாளர் திரு.எஸ்.முத்தமிழ்செல்வன் அவர்கள், மக்கள் தொடர்பு அலுவலர் திருமதி.ஏ.பி.லதா அவர்கள் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள் மேலும் கட்சியின் உறவுகள் பலரும் கலந்துகொண்டார்கள்