• மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களின் தாயார் மறைவுக்கு டாக்டர்.பாரிவேந்தர் எம்பி இரங்கல் மாண்புமிகு பாரத பிரதமர் தியாகச் செம்மல் அவர்களின் தாயார் மறைவு குறித்து கேள்விப்பட்டு சொல்லனா துயரத்தை நான் அடைகிறேன். நூறு வயதை அடைந்த அந்த தெய்வத் தாயின் பெருமையை என்னுடன் பலமுறை பகிர்ந்துள்ளார். 2014ல் SRM பல்கலைக்கழக வளாகத்தில் என் தாயின் வெண்கல சிலையை திறந்து வைத்து பேசும் பொழுது ஒரு தாயின் ஆசீர்வாதம் எவ்வளவு முக்கியமானது என்று என்னோடு பேசினார். அத்தகைய பெருமைக்குரிய அவரின் தாயின் இழப்பு என்பது அவருக்கு மட்டுமன்றி இந்திய மக்களுக்கே பெரிய இழப்பாக இருக்கும். அத்தகைய தெய்வத் தாயை இழந்துவாடும் பாரத பிரதமர் அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மறைந்த தெய்வத் தாயின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்