-
தமிழக அரசின் முன்னாள் அட்வகேட் ஜென்ரல் திரு.ஆர்.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நேற்று இயற்கை எய்தினார். அன்னாரது உடலுக்கு இன்று (19.10.22) பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் பாரிவேந்தர் எம்.பி., இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து, பொதுச் செயலாளர் பேராசிரியர் திரு.பி.ஜெயசீலன், பொருளாளர் மூத்த வழக்கறிஞர் ஐயா திரு.ஜி.ராஜன், பாமுச பொதுச் செயலாளர் திரு.எஸ்.எஸ்.வெங்கடேசன், துணைத் தலைவர் திரு.ஏ.திருஞானம், துணைப் பொதுச் செயலாளர் திரு.ஆரோக்கியம், ஆகியோர் மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். இந்திய ஜனநாயக கட்சியின் மாவட்டத் தலைவர்கள் தென் சென்னை திரு.சிவசங்கர், மத்திய சென்னை திரு.ராமசாமி, சென்னை புறநகர் திரு.ஹென்றி ஜேம்ஸ், பாமுச மாவட்ட செயலாளர் திரு.தங்கவேல், பொருளாளர் திரு.அமல்ராஜ், திருவள்ளூர் மாவட்டத் தலைவர் திரு.சண்முகம், செயலாளர் திரு.வெங்கடேசன், பொருளாளர் திரு.திருவேங்கடம், பல்லவரம் திரு.ராபர்ட், அமைப்புச் செயலாளர் திரு.சுரேஷ், திரு.கார்த்திக், திரு.கோலபக்தன், திரு.சவுந்திரபாண்டியன், திரு.பழனிசாமி, திரு.குமரன், திரு.கண்ணன், திரு.மைக்கேல், திரு.பிரபாகரன் மற்றும் ஐஜேகே- பாமுச மாவட்ட, வட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.