• இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகியின் மகன் மரணத்திற்க்கு IJK - தலைவர் ரவிபச்சமுத்து ஆழ்ந்த இரங்கல்

    இந்திய ஜனநாயக கட்சியின் கோவை புறநகர் மாவட்ட தலைவர் மணிமாறன் அவர்களின் மூத்த மகன் சித்தார்த் (வயது 18) நேற்று இரவு (20.04.2017) நடைபெற்ற சாலை விபத்தில் அகால மரணமடைந்தார் என்ற செய்தி மிகுந்த மனவேதனையையும், வருத்தத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.

    பல்லாண்டு காலம் வாழ்ந்து, பல்வேறு சாதனைகளை படைத்திருக்க வேண்டிய சித்தார்த் சற்றும் எதிர்பாராத வகையில் சிறு வயதிலேயே அகால மரணம் அடைந்த செய்தி யாராளும் தாங்கிகொள்ள முடியாது.

    சித்தார்தின் ஆன்மா இறைவனின் பாதங்களில் சாந்தியடையவும், அவரை இழந்துவாடும் அன்னாரின் குடும்பதினர் – உறவினர்கள் - நண்பர்களுக்கு என் சார்பிலும், இந்திய ஜனநாயக கட்சியின் சார்பிலும் ஆழ்ந்த இரங்களையும் – வருத்தினையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.