Loading...

அறிமுகம்

இந்திய ஜனநாயக கட்சி ஓர் அறிமுகம்

உயரிய கொள்கைகள், சமூக மேம்பாடு, மாணவ மாணவிகளுக்கு உலகத் தரக் கல்வி, நாட்டு மக்களின் குறிப்பாக அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம், சுகாதாரம், பொருளாதாரம் என அனைத்தும் உயர்வு காண பெரும் இலட்சியங்களோடு SRM குழுமம் மற்றும் SRM பலகலைக்கழகத்தின் நிறுவனரான உயர்திரு. Dr.பாரிவேந்தர் M.P அவர்களால் சமூக நலனோடு நிறுவப்பட்ட மாபெரும் கட்சி என்ற பேரமைப்பு.

இந்த அமைப்பின் முக்கிய நோக்கம் இந்திய அரசியலில் புரட்சியும், மாணவ மாணவிகளுக்கு சமூக எழுச்சியும் ஏற்படுத்தி நல்லதோர் மாற்றத்தை உருவாக்கி நாட்டை நல்ல பாதையில் வழிநடத்திச் செல்வதே ஆகும்

இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனரான Dr.பாரிவேந்தர் M.P அவர்கள் கூ றுகையில், “படித்த இளைஞர்கள் எப்போதும் அரசியலை விட்டு விலகி இருக்கக்கூடாது. அரசியலில் களம் இறங்கி புதிய பரிமாணத்தை அரசியலில் புகுத்தி நாட்டு மக்களுக்கு எழுச்சி தரும் விதமாக செயல்பட வேண்டும்” என்று கூறுகிறார்.

இந்திய இளைஞர்கள் அனைவருக்கும் சமமாக உயரிய கல்வியை வழங்குவது மிகவும் அத்தியாவசியம் என்று கூறுகிற அவர், வரி கட்டுவோரின் பணத்தை நாட்டின் உள்கட்டுமான பணிகளுக்காக செயல்படுத்தி அனைத்து இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்குமாறு வழிவகை செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார்.

மேலும், இந்திய ஜனநாயக கட்சியானது மத்திய அளவிலும், மாநில அளவிலும் அறிவு சார்ந்த அரசாங்கத்தை செயல்படுத்தி மக்களுக்கு பல நன்மைகளையும், அவர்கள் பயன்பெறும் வகையிலே பல அறிய திட்டங்களையும் நிறைவேற்றும்.

நதிகள் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்தி, முக்கியமாக தெனிந்தியாவில் அனைத்து நதிகளையும் இணைத்து அதன் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து மின் தட்டுப்பாட்டை குறைக்க வேண்டும்.

அரசாங்கத்திடம் தன்னுடைய கோரிக்கையாக “பொறியியல் கல்லூரிகளை விட விவசாயக் கல்லூரிகள் பலவற்றை நிறுவி கிராமப்புற இளைஞர்களுக்கு விவசாயத்தில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும். நம் மண்ணானது விவசாயத்தை நம்பியே இயற்கையை நம்பியே இருக்கிறது. அதில் விவசாயத் துறை பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகப்பட வேண்டும்.

விவசாயக் கல்லூரிகள் திறக்கப்படுகின்ற போது அதிகளவிலான மாணவர்கள் அதில் தேர்ச்சி பெறுவார்கள். மேலும், விவசாயத்திற்கு காப்பீட்டு திட்டம், நவீன வசதிகள் கொண்ட இயந்திரங்கள் என அனைத்து வசதிகளும் அரசாங்கம் செய்து கொடுக்கும் பட்சத்தில் அதிகளவில் லாபம் ஈட்ட முடியும்

இந்தியாவை சுற்றுலாத் தளமாக மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தும் அவர், வெளிநாட்டு மதுபானங்களை விற்பதற்கு பதிலாக பதநீரை விற்க வேண்டும் என்று அறிவுரைக்கிறார்.

அதுமட்டுமின்றி. அரசாங்கம் இலங்கை தமிழர்களின் நலனுக்கும் அவர்களது வாழ்வாதாரத்திற்கும் போதிய வசதிகள் செய்து தர வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

About Us

Our Policy

IJK - கட்சியின் உயரிய கொள்கைகள்

மக்களுக்காக, மக்களால், மக்களிடமிருந்து உருவான ஆட்சி

தமிழில்
  • மது இல்லா தமிழ்நாடு
  • லஞ்சம் மற்றும் ஊழல் ஒழித்தல்
  • இலவசங்களை தவிர்த்தல்
  • விவசாய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை முதல்வராக்குதல்
  • பெண்களுக்கு சமவாய்ப்பு
  • விவசாயத்தில் விஞ்ஞானம்
  • பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு
  • அரசியல் பதவிகள் இருமுறை மட்டுமே
English
  • Liquor-free Tamil Nadu
  • Corruption-free Tamil Nadu
  • Avoiding Freebies
  • Farming family member as Chief Minister
  • Equal Opportunities for Women
  • Science in Agriculture
  • Economic-based Reservation
  • Two-term Political Positions