• வரும் 28-ம் தேதி செவ்வாய்க்கிழமை திருச்சியில் நடைபெற உள்ள மண்டல பொறுப்பாளர்கள் அறிவிப்பு கூட்டத்திற்கு வருகை தாருங்கள் - IJK நிர்வாகிகளுக்கு தலைவர் ரவிபச்சமுத்து அழைப்பு

    அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஒன்றிய – நகர – பேரூர் பகுதிகளில் கட்சியின் கிளை அமைப்புகளை உருவாக்குவதிலும், பொதுமக்களிடம் நம் கட்சியை கொண்டு செல்வதிலும் நாம் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்பதே என் விருப்பமாகும். அதன் முதற்கட்டமாக, மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் கட்சியின் செயல்பாடுகளை வேகப்படுத்தவும், தலைமையுடனான தொடர்பினை முறைப்படுத்தவும் ‘மண்டல ஒருங்கிணைப்பாளர் எனும் பொறுப்பிற்கு புதியதாக நிர்வாகிகளை நியமிக்க உள்ளோம்.

    அதற்கான அறிவிப்பினை வெளியிடும் நோக்கத்தில், வரும் 28-ம் தேதி (28.02.2017) செவ்வாய்க்கிழமை பகல் 2.00 மணிக்கு – திருச்சி SRM ஹோட்டலில், ‘மாவட்ட பொது உறுப்பினர்களுக்கான கூட்டம்’ நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.