• தோழர் நல்லக்கண்ணுவின் மனைவி ரஞ்சிதம் மறைவிற்கு -டாக்டர் பாரிவேந்தர் இரங்கல்

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் – முதுபெரும் அரசியல்வாதியுமான தோழர் நல்லக்கண்ணு அவர்களின் மனைவி ரஞ்சிதம் (80) – உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். என்ற செய்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

    ஒரு ஆசிரியராக தனது வாழ்ககையை தொடங்கி – படிப்படியாக தன்னை தயார்படுத்தி, ஸ்ரீவைகுண்ட அருகிலுள்ள மணல் விளை ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி, தலைசிறந்த மாணவர்களை உருவாக்கியவர் மறைந்த ரஞ்சிதம் அவர்கள்.

    கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக தொழிற்சங்க தலைவராகவும் -இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளராகவும் பணியாற்றி வந்த தோழர் நல்லக்கண்ணு அவர்கள், பொது மக்களின் நன்மதிப்பையும் – ஆதரவையும் பெற்று பொதுவாழ்க்கையில் தலைசிறந்து விளங்க மிகுந்த ஒத்துழைப்பையும் – தன்னம்பிக்கை கொடுத்தவர் மறைந்த ரஞ்சிதம் அவர்கள்

    அன்னாரை இழந்து வாடும் அவரின் குடும்பத்தினருக்கும், கம்யூனிஸ்ட் தோழர்களுக்கும் இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் – வருத்தத்தினையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.