• வரும் 19 ம் தேதி IJK மாவட்ட பொறுப்பாளர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் சென்னையில் நடைபெறும் - டாக்டர் பாரிவேந்தர் அறிவிப்பு

    நடைபெறவுள்ள உள்ளாட்சி மன்றத் தேர்தலில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான அனைத்து இடங்களிலும் இந்திய ஜனநாயகக் கட்சி போட்டியிடவேண்டும் என நமது கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆலோசனை நடத்த, வரும் 19-ம் தேதி(19.10.2016) புதன் கிழமை காலை 11.00 மணிக்கு சென்னை IJK  தலைமை நிலைய கூட்ட அரங்கில் மாவட்ட பொறுப்பாளர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் நடைபெற உள்ளது.  இக்கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள் அனைவரும் அவசியம் கலந்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

    மேலும், தமிழக அரசின் மூலம், உள்ளாட்சி மன்ற இடங்களுக்கான –இட ஒதுக்கீட்டுப் பட்டியல் வெளியிடப்பட்டதும், நம் கட்சியின் வேட்பாளர்கள் முறைப்படி அறிவிக்கப்படுவார்கள். அதற்கு ஏதுவாக தங்கள் மாவட்டத்திலுள்ள, உள்ளாட்சி மன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தலைமைக்கு  விரிவாக எடுத்துரைக்கும் வகையில், மாவட்ட பொறுப்பாளர்களின் கையொப்பமுடன் கூடிய அறிக்கை ஒன்றினை தயாரித்து,இக்கூட்டத்திற்கு வரும்பொழுது உடன் எடுத்துவர வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.