• தமிழக முதல்வர் பூரண நலம் பெற்று மீண்டும் மக்கள் பணியை தொடரவேண்டும் - டாக்டர் பாரிவேந்தர் வாழ்த்து

    தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் இடைவிடாத சட்டப் போராட்டத்தின் மூலம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது. அதனை தமிழ்நாடே பாராட்டி வரவேற்றது.

    அச்செய்தி நமக்களித்த மகிழ்ச்சியின் தன்மை குறையுமுன்பே, முதல்வர் ஜெயலலிதா அவர்கள் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்கிற செய்தி நமக்கு கவலையளித்தது.

    தமிழக விவசாயிகளின் வாழ்வில் ஒரு நம்பிக்கை ஒளிவீச உள்ள இத்தருவாயில் தமிழக முதல்வரின் உறுதியான சேவை இப்போதைய தேவையாக உள்ளது. எனவே, அவர் பரிபூரண குணமடைந்து மீண்டும் மக்கள் சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள வாழ்த்துகிறேன்.