• தன்னலமற்ற மனித சமுதாயம் மலர்ந்திட நாம் அனைவரும் பாடுபட வேண்டும் - டாக்டர் பாரிவேந்தர் பக்ரீத் வாழ்த்து

    தன்னைப் படைத்த இறைவனின் கட்டளையை செயல்படுத்துவதே குறிக்கோளாக கொண்டிருந்த இறைதூதர் இப்ராஹீம் அவர்களின் ஈடு இணையற்ற தியாகத்தை நினைவுபடுத்தும் விதமாக இஸ்லாமிய மக்களால் தியாகத் திருநாள் எனப்போற்றப்படும் “ஈத் உல் அஸா“ எனும் நோன்பை குறிப்பது இந்த பக்ரீத் பெருநாளாகும்

    இந்நன்னாளில் மக்கள் மனதில் விட்டுக்கொடுத்தல் – ஒற்றுமை – தியாகம் – அர்ப்பணித்தல் – எளியோருக்கு உதவிடுதல் – இறைவனுக்கு நன்றி கூறல் போன்ற  நற்பண்புகள் மக்கள் மனதில் பல்கிப் பெருகவேண்டும்

    கடமையை செய்தால் உண்மையான இன்பம் பிறக்கும் என வலியுறுத்தும் இந்நாளில்அண்ணல் நபிகள் நாயகம் உலகிற்கு அளித்த நற்பண்புகள் அடங்கிய திருக்குரானின் போதனைகளை மனதில் நிறுத்திதன்னலமற்ற மனித சமுதாயம் மலர்ந்திட,  இத்தியாக திருநாளை கடைபிடிக்கும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த பக்ரீத் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.