• தமிழக விவசாய சங்கத் தலைவர் சிவசாமி அவர்களின் மறைவிற்கு - டாக்டர் பாரிவேந்தர் இரங்கல்

    கோவை காரமடை மத்தம்பாளையத்தை சேர்ந்த விவசாய சங்க தலைவர் டாக்டர் சிவசாமி (83) அவர்கள் உடல்நலக்குறைவால் கடந்த 14.08.2016 அன்று இறந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு வருந்துகிறேன்.

    தனது டாக்டர் தொழிலை விடுத்து அப்போதைய தமிழக விவசாய சங்க தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்களுடன் இணைந்து பல போராட்டங்களில் ஈடுபட்டார். 1970 மற்றும் 72-ல் ஆண்டுகளில் விவசாயிகளுக்கான மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி அனைத்து மாவட்டங்களிலும் மாட்டுவண்டி போராட்டத்தை நடத்தியுள்ளார். இதன் காரணமாக பலமுறை சிறையும் சென்றுள்ளார்.

    டாக்டர் சிவசாமி அவர்கள் ஏறக்குறைய 25 ஆண்டுகளாக தமிழக விவசாய சங்கத் தலைவராக இருந்துள்ளார். அவரின் இறப்பு விவசாயிகளுக்கு பெரும் இழப்பாகும். அவரை இழந்துவாடும் அன்னாரின் குடும்பத்தினருக்கும் – விவசாய சங்கத்தினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன்.