இந்திய ஜனநாயகக் கட்சியை நவீன தளத்திற்கு கொண்டுசென்ற பெருமை கட்சியின் தலைவர் இளையவேந்தர் திரு.ரவிபச்சமுத்து அவர்களைச் சேரும். தன் இளம் வயதிலேயே பல சாதனைகளை நிகழ்த்தி, அதில் வெற்றியும் புகழும் பெறவேண்டும் என்கிற முனைப்பில் செயல்படத் துவங்கினார் திரு. ரவிபச்சமுத்து அவர்கள்.
இதன் முதல்படியாக, தனது தந்தையார் அய்யா டாக்டர் பாரிவேந்தர் அவர்களுடன் இணைந்து அவரின் கல்விப்பணிக்கு உறுதுணையாக இருந்தார். வள்ளியம்மை பொறியியல் கல்லூரியில் தொடங்கி, எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் உருவானது வரை அவரின் பங்களிப்பு போற்றத்தக்கதாக இருந்தது.
கல்வித்துறையில் தனது தந்தையாருடன் இணைந்து செயலாற்றிய இளையவேந்தர் அவர்கள், தனியாகவும் பல துறைகளில் வெற்றி முத்திரை பதித்துள்ளார். எஸ்.ஆர்.எம் குழுமத்தின் Chairman ஆகவும், அரியானா மாநிலத்தில், சோன்பேட்டிலுள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும், சென்னை காட்டாங்குளத்தூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தராகவும் (Pro Chancellor) உள்ளார்.
மருத்துவத்துறையில் மிகப்பெரும் சாதனையாக சென்னை வடபழனியில் SIMS மருத்துவமனையைத் தொடங்கினார். தற்போது உலகத்தரத்திலான 400 படுக்கை வசதிகளுடன் கூடிய முன்னணி மருத்துவமனையாக இதனை வளர்த்திருக்கிறார். மேலும் 1500 படுக்கை வசதிகளுடன் கூடிய மூன்று மருத்துவக்கல்லூரிகளை நடத்திவருகின்றார்.
சென்னை, திருச்சி, தூத்துக்குடி உட்பட தமிழகம் முழுவதும் ஆறு உயர்தர ஹோட்டல்களை நடத்தி வருகின்றார். மேலும், SRM TRANSPORT என்கிற பெயரில், நூற்றுக்கும் மேற்பட்ட வழித்தடங்களில் சொகுசு பேருந்துகளை இயக்கி வருகின்றார். ஊடகத் துறையிலும் கால்பதித்து, வேந்தர் TV என்கிற தொலைக்காட்சினையையும் நடத்தி வருகின்றார். சாதாரண, சாமானிய மக்களுக்கும் உதவும் உள்ளம் படைத்தவரான தலைவர் இளையவேந்தர் அவர்கள் அரசியல் சமூக நடவடிக்கைகளிலும் இளமைக்காலம் தொட்டே ஈடுபட்டு வருகின்றார். அதன் தொடர்ச்சியாக அரசியலிலும் ஈடுபட்டு தன் பொதுச்சேவையை தொடர்ந்து ஆற்றிவருகின்றார்.
அய்யா டாக்டர் பாரிவேந்தர் அவர்களால் 2010–ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவராக, 2015-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றார்.
2014 நாடாளுமன்றத் தேர்தல், 2016 சட்டமன்றத் தேர்தல், 2019 உள்ளாட்சிமன்றத் தேர்தல் ஆகியவற்றில் திறம்பட செயலாற்றி, கனிசமான வாக்குகளை ஐஜேகே வேட்பாளர்கள் பெறுவதற்கு உறுதுணையாக இருந்துள்ளார்.
அனைத்திற்கும் மேலாக 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அய்யா டாக்டர் பாரிவேந்தர் அவர்கள், பெரம்பலூர் தொகுதியில் எம்.பி–யாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு, அரசியல் வியூகங்களை வகுத்து, அவரின் வெற்றிக்கு முதற்காரணமாக இருந்துள்ளார்.
எதிர்வரும் காலங்களில் தலைவர் இளையவேந்தர் அவர்களின் தலைமையில் இந்திய ஜனநாயகக் கட்சி வெற்றிநடைபோடும்.! அரசியலில் சிறப்பானதொரு இடத்தினை பெறும்.!!