• அறியாமை என்னும் இருளை போக்கி மக்களுக்கு வெற்றியையும் வளர்ச்சியையும் தீப ஒளி வழங்கட்டும் IJK தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து அவர்கள் விடுத்திருக்கும் -தீபாவளி திருநாள் வாழ்த்துச் செய்தி.

    தீப ஒளி திருநாள் என்று அழைக்கப்படும் தீபாவளி இந்துக்கள் மட்டுமல்லாது உலகின் பல்வேறு மக்களாலும் கொண்டாடப்படும் பண்டிகையாகும். தீபாவளி அன்று அனைவரும் அதிகாலையில் எழுந்து எண்ணெய்க் குளியல் செய்து புத்தாடை உடுத்தியும்,  பட்டாசுகள்  வெடித்தும்,  இனிப்புக்கள்  செய்தும் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டு, கொண்டாடுவர்.

    பண்டிகைகளின் நோக்கம் குடும்பத்தில் மகிழ்ச்சியும் – சமுதாயத்தில் சமத்துவமும், சகோதரத்துவமும் நீடித்து, மக்களிடம் வறுமையும், வன்முறையும் நீங்கி – ஒற்றுமை செழித்து அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியும் - வளர்ச்சியும் தழைத்தோங்க வேண்டும் என்பதுதான்.

    தீமையை அகற்றி – நன்மை விளைவிப்பதன் அறிகுறியாக விளக்கேற்றி வைக்கும் ஒளித்திருநாளான இத்தீபாவளி பண்டிகையில் பட்டாசு ஒலியிலும் – மத்தாப்பின் ஒளியிலும் மக்களின் வாழ்வு மலர்ந்து – மகிழ்ச்சி வெள்ளம் பெருக வேண்டும். அறியாமை என்னும் இருளை போக்கி மக்கள் அனைவருக்கும் வெற்றியையும் வளர்ச்சியையும் தீப ஒளி வழங்கட்டும் எனக் கூறி, அனைவருக்கும் இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில், எனது உளம் கனிந்த தீபாவளி திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

     

    வாழ்த்துக்களுடன்,

    (டாக்டர் ரவி பச்சமுத்து)

    தலைவர்

    இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)