• இளம் வயதில் முடிசூடி 70 ஆண்டுகள் இங்கிலாந்தை ஆண்டு “வரலாற்றில் முக்கிய இடத்தைப்பெற்றவர் எலிசபெத் ராணி” ராணி இரண்டாம் எலிசபெத் அவர்களின் மறைவுக்கு - டாக்டர் பாரிவேந்தர் M.P இரங்கல்

    இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் அவர்கள் உடல்நலக்குறைவால் நேற்று (08.09.2022) இறைவனடி சேர்ந்தார் என்கிற செய்தியறிந்து மிகவும் வருத்தமடைகின்றேன்.

     எலிசபெத் அலெக்சாண்டிரியா மேரி 1952-ஆம் ஆண்டு, தனது 25-ஆம் வயதில் ராணியாக பதவியேற்று, 70 ஆண்டுகள் பிரிட்டனின் ராணியாக மட்டுமின்றி, 14 நாடுகள் அரசியல் சாசன சட்டப்படி அரசியாகவும் பதவியில் இருந்து சிறப்பாக வழிநடத்தி, நீண்ட காலம் இங்கிலாந்து நாட்டை ஆண்டவர் என்ற பெருமையுடன் வரலாற்றில் மிக முக்கிய இடத்தினைப்பெற்றவர். இங்கிலாந்து பிரதமர் தேர்வில் முக்கிய பங்கு வகித்தவர். தனது ஆட்சிக்காலத்தில் 15 பிரதமர்களை பதவியில் அமர்த்திய பெருமைக்குரியவர். தனது தேசத்திற்கும் மக்களுக்கும் மிகச்சிறப்பான தலைமையை வழங்கியவர். இரண்டாம் உலகப்போரின் போது ராணுவ வாகனத்தின் ஓட்டுநராக தன்னார்வத்துடன் பணியாற்றியவர்.

    ராணி இரண்டாம் எலிசபெத் மறைவால் அவரை இழந்து வாடும் அரச குடும்பத்தாருக்கும் – இங்கிலாந்து நாட்டு மக்களுக்கும் என் சார்பிலும், இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பிலும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு, மகாராணியின் ஆன்மா இறைவனடி நிழலில் இளைப்பார வேண்டுகின்றேன்.

     

    வருத்தங்களுடன்,

    டாக்டர் பாரிவேந்தர் M.P,

    பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி.