• பாரதரத்னா டாக்டர் லதாமங்கேஷ்கர் அவர்களின் மறைவிற்கு பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பாரிவேந்தர் M.P அவர்கள் விடுத்திருக்கும் இரங்கல் செய்தி

    13 வயதில் தன்னுடைய இசைப்பயணத்தைத் தொடங்கி, 70 ஆண்டுகளுக்கும் மேலாக 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி இந்தியா மட்டுமின்றி உலக அளிவில் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தினைப் பெற்ற பின்னணிப் பாடகி பாரதரத்னா டாக்டர் லதாமங்கேஷ்கர் அவர்கள் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உடல்நலக்குறைவால் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.

    இந்தியாவின் இசைக்குயில் -  இசைத்துறை மட்டுமின்றி பலதரப்பட்ட உயரிய விருதுகளைப் பெற்றவர் – மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர் – இந்தியாவின் நைட்டிங்கேல் என்று புகழப்பட்டு, பலவகைச் சிறப்புகளைப் பெற்ற திருமதி லதா மங்கேஷ்கர் அவர்களின் மறைவு இசைத்துறைக்கும் -  கலைத்துறைக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

    அம்மையாரின் மறைவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் –இசைத்துறை நண்பர்களுக்கும் - ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டு, அவரின் ஆன்மா இறைவனடி நிழலில் இளைப்பாற இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

    வருத்தங்களுடன்,

    டாக்டர் பாரிவேந்தர் M.P

    பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி.