• “ஒரு மனிதன் இம்மையில் எப்படி வாழவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டியவர் முகம்மது நபிகள்” - டாக்டர் பாரிவேந்தர் M.P. மீலாதுன் நபி வாழ்த்து

    அகிலத்திற்கு ஒரு அருட்கொடையாக அளவற்ற அருளாளன் - நிகரற்ற அன்புடையோனாகிய, அல்லாஹூ தாலாவின் இறுதித் தூதுவராக வந்து உதித்தவர் முகமது நபி(ஸல்) அவர்கள்.

    உலகில் அன்பு, நட்பு, ஒற்றுமை, சகோதரத்துவம், சகிப்புத் தன்மை, எதிரிகளை மன்னிக்கும் பெருந்தன்மை ஆகியவை வளர்வதற்கும், இம்மையில் ஒரு மனிதன் எப்படி வாழவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாகவும் வாழ்ந்து காட்டியவர் முகம்மது நபிகள் அவர்கள்.

    இஸ்லாமிய சகோதரர்கள் மகிழ்ந்து கொண்டாடும் இந்த இனிய மீலாதுன் நபி திருநாளை, எல்லா மதத்தினரும் போற்றுவோம். மானுடம் தழைக்க இறைத்தூதர் நபிகள் நாயகம் அருளிய போதனைகளை மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வில் கடைப்பிடித்து வாழ்ந்தால், வாழ்வில் ஏற்றம் பெறலாம்.  முகம்மது நபி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்து அவரது திடமனது, மாறாத சொல்வளம், பேச்சாற்றல் ஆகியவைகளை நாமும் பெறுவோம் என்று கூறி, உலகெங்கும் வாழும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது ‘மீலாதுன் நபி’ வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

    வாழ்த்துக்களுடன்,

    டாக்டர் பாரிவேந்தர் M.P

    பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி.