-
பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பாரிவேந்தர் M.P அவர்கள் விடுத்திருக்கும் - ஓணம் திருநாள் வாழ்த்துச் செய்தி
விவசாய தொழிலாளர்களின் கடுமையான உழைப்புக்கு பின் கிடைத்த அறுவடைக்காலத்தைக் கொண்டாடுவதற்காகவும், மக்களைக் காண வருகை தரும் மகாபலி மன்னனை வரவேற்பதற்காகவும், மலையாள மொழி பேசும் மக்களால் திருவோணம் திருநாள் கொண்டாடப்பட்டு வருகின்றது.
கொரோனா பேரிடரின் பாதிப்புகளில் இருந்து மனிதகுலம் விரைந்து மீண்டெழுந்து, நலமும் வளமும் பெருகிட இந்த நன்னாளில் வழி பிறக்கட்டும்.
தேசிய சிந்தனையுடன் அனைத்து மொழி சகோதர - சகோதரிகளும் ஒன்றாக நம் தேச எண்ணத்தோடு முன்னேறும் போது, இந்த நாடு ஒட்டு மொத்த வளர்ச்சியைப் பெறும். சமுதாயத்தில் சமாதானத்திற்கும் - சமூக ஒற்றுமைக்கும் உழைக்கும் அனைவருக்கும் இந்த ஓணம் நாளில் சகோதரத்துவம் வலுவடைந்து தேச ஒற்றுமை வளர வேண்டும் எனக்கூறி, உலகம் முழுவதும் வாழும் மலையாள மொழி பேசும் சகோதர, சகோதரிகளுக்கு இனிய ஓணம் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்த்துக்களுடன்,
நாடாளுமன்ற உறுப்பினர்,
பெரம்பலூர் தொகுதி.