• நாளை பிறக்கவுள்ள 2020-ஆம் ஆண்டு, மக்களுக்கு மகிழ்ச்சியையும் எல்லா வளங்களையும் தரவேண்டுமென விரும்புகின்றோம். கடந்த ஆண்டில் நாம் தவறவிட்ட செயல்களை இந்த ஆண்டில் செய்துமுடிக்க வேண்டுமென உறுதி ஏற்போம். மக்களிடையே பதட்டம் இல்லாத சூழ்நிலையை உருவாக்கி, தொழில் துறையிலும் – பொருளாதாரத் துறையிலும் நம்முடைய நாட்டை மேம்படுத்துவதற்கு மத்திய – மாநில அரசுகள் முன்வரவேண்டும். அதற்கான நல்ல வாய்ப்பினை நாளை பிறக்கவிருக்கின்ற புத்தாண்டு தரவேண்டுமெனக் கூறி, அனைவருக்கும் இனிய ஆங்கிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.