• தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள்,தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்படுள்ளதற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

    திருமதி தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தேசிய பாரம்பரியமிக்க குடும்பத்தைச் சார்ந்தவர்.சிறந்த பேச்சாற்றலும், துணிச்சலான அரசியல் செயல்பாடும் கொண்டவர். தமிழகத்தில் இருந்து நியமிக்கப்படும் முதல் பெண் ஆளுநர் என்கிற வகையில் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் நியமனம் குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும். தன்னுடைய  பதவிக்காலத்தில்  தெலுங்கானா மாநிலத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருந்து, தமிழகத்தின் பெருமையை நிலைநிறுத்துவார் என நம்புகின்றோம். அவரின் பணி சிறக்க மீண்டும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.