• பிரேசில் நாட்டின் தலைநகர் ரியோ டி ஜெனிரோ-வில் நடைபெற்ற உலக நாடுகள் அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி இளவேனில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபில் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்ற இளவேனில், தன்னுடன் போட்டியிட்ட மற்ற வீராங்கனைகளைப் பின்னுக்குத்தள்ளி 251.7 புள்ளிகளைப் பெற்று இந்த தங்கப் பதக்கத்தினை கைப்பற்றியுள்ளார்.

    செல்வி இளவேனில் கடந்த ஆணடு ஜூனியர் உலகக்கோப்பையில் பங்கேற்று தங்கம் வென்றுள்ளார். தற்போது சீனியர் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியிலும் தங்கம் வென்ற செல்வி இளவேனில் அவர்களுக்கு, என்னுடைய இதயமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்வதோடு,இந்தியாவின் பெருமையை உலக அளவில் நிலைநாட்டியுள்ள அவரின் உழைப்பும் – அர்ப்பணிப்பும் தொரடவேண்டுமென வாழ்த்துகின்றேன்.